(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு

மட்டக்களப்பு மாவட்ட செயலகம் அமைந்துள்ள ஒல்லாந்தர் கோட்டை நுளைவாயில் பாதை காபட் இட்டு புனரமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரனின் வேண்டுகோளுக்கிணங்க வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கிழக்கு மாகாண பணிப்பாளர் பொறியியலாளர் கே. சிவகுமார் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு இப்பாதையினை காபட் இட்டு செப்பனிட பணிப்புரை விடுத்திருந்தார். இதற்கமைவாக இப்பாதை காபட் இடப்பட்டு செப்பனிப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது.

மாவட்டத்தின் முக்கிய சுற்றுளாத் தளமாக இருக்கும் இவ்வொல்லாந்தர் கோட்டையினைப் பார்வையிட அதிகமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உள்ளாசப் பயனிகள் வருகைதருவதுடன் இங்கு மாவட்ட செயலகம் அமைந்திருப்பதனால் சேவைபெறவரும் பல பொதுமக்களும் அரச அதிகாரிகளும் இச்சேதமைந்த பாதையினைப் பயன்படுத்துவதில் பல அசௌகரியங்களை எதிர்நோக்கி வந்தனர். 

இதன் காரணமாக நீண்டகாலமாக சேதமடைந்திருத்த இப்பாதையினை திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்க அதிபர் கருணாகரன் விடுத்த வேண்டுகோளுக்கு, வீதி அபிவிருத்தி அதிகார சபை மாகாணப் பணிப்பாளர் சிவகுமார் உடனடி நடவடிக்கை எடுத்மைக்கு அரசாங்க அதிபர் தனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார். 

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours