(எஸ்.அஷ்ப்கான்)

காரைதீவு பிரதேசத்தில் இருந்து கல்முனை நோக்கி வந்த டிபெண்டர் வாகனம் ஒன்றினை போக்குவரத்து பொலிசார் வழிமறித்தபோது பொலிசாரின்  சமிக்ஞையினை மீறி டிபெண்டர் வாகனம் தொடர்ந்தும் கல்முனையை நோக்கி அதிவேகமாக பயணித்ததன் காரணமாக போக்குவரத்து பொலிசார் பின்தொடர்ந்த நிலையில் போக்குவரத்து பொலிசாரின் வாகனத்தினையும் தாக்கிவிட்டு குறித்த டிபெண்டர் வாகனம் தொடர்ந்தும்  கல்முனை கடற்கரைப்பள்ளிவாசல் வீதியின் ஊடாக அதி வேகமாக பயணம் மேற்கொண்டு கடற்கரை வீதியில் இடை நடுவில் டிபெண்டரினை விட்டு  குறித்த வாகன சாரதியும் ஏனையவர்களும் தப்பிச் சென்றனர்.

கல்முனை பொலிஸ் தலைமைப் பீட பொறுப்பதிகாரி எம்.ரம்சீம் பக்கிர் தலைமையிலான குழுவினர், அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து, டிபெண்டர் வாகனத்தினை கைப்பற்றி பாரம் தூக்கி இயந்திரத்திரத்தின் உதவியுடன் கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு வாகனத்தை கொண்டு சென்றனர்.

குறித்த வாகனத்தினுள் போதைபொருட்கள் இருப்பதாக சந்தேகிக்கப்படு கின்ற நிலையில் தப்பிச் சென்றவர்களை தேடும் நடவடிக்கை மற்றும் மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். 

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours