தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணியின் ஏற்பாட்டிலும் தமிழ் மக்களை அடக்கியொடுக்கப் பயன்படுத்தப்பட்டுவரும் பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்குவதற்கு அழுத்தங்களை வழங்கும் வகையில் முன்னெடுக்கப்படும் கையெழுத்து போராட்டத்திற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் முழு ஆதரவினை வழங்கியது.
ஞாயிற்றுக்கிழமை 27 ஆம்திகதி வடகிழக்கு வாலிப முன்னணி தலைவர் அவர்களின் ஒருங்கிணைப்பில் மட்டக்களப்பு மாவட்ட வாலிப முன்னணியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட வாலிபர் முன்னணி தலைவர் லோ.தீபாகரன் அவர்களின் தலைமையில் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றலில்பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து போராட்டம் இடம்பெற்றது
இக்கையெழுத்துப் போராட்ட நிகழ்வில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் கிழக்குமாகாண இணைப்பாளர் பொ.உதயரூபன் மற்றும் தமிழ் முஸ்லிம் ஆசிரியர்கள் இப்போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
Post A Comment:
0 comments so far,add yours