(காரைதீவு  சகா)

வரலாற்றுப்பிரசித்திபெற்ற மாட்டுப்பளை மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகத்திற்கான முன்னேற்பாட்டுகூட்டம் ஆலயமுன்றலில் ஆலயத்தலைவர் கி.ஜெயசிறில் தலைமையில் நேற்று நடைபெற்றது.

அவ்வாலயத்தின் ஆவர்த்தன மகாகும்பாபிசேகம் ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி நடைபெறவுள்ளமை தெரிந்ததே.

ஆலயபரிபாலனசபையின் நிருவாகசபைக்கூட்டத்தில் ஆலயத்தலைவர் கி.ஜெயசிறில் கும்பாபிசேகம் தொடர்பான விளக்கத்தையும், நிதியின் அவசியத்தையும் எடுத்துரைத்து, இதுவரை தானாக மனமுவந்து நிதியுதவியளித்த  அமெரிக்காவில் வாழும் தம்பிலுவில் றதீஸ்பாண்டியன் ,  அவுஸ்திரேலியாவில் வாழும் பாண்டிருப்பு ஜனபாலச்சந்திரன் மற்றும் பல உள்நாட்டுபக்தர்கள் பற்றியும் எடுத்துரைத்து நன்றியும் தெரிவித்தார். தேசத்துக்கோயிலான இவ்வாலயத்திற்கு உலகெங்கும்வாழும் தமிழ்மக்களின் நிதிப்பங்களிப்பு மேலும் தேவை.அனைவரும் ஒத்துழைக்கவேண்டும் எனக்கேட்டுக்கொண்டார்.

ஆலயபரிபாலனசபையின் ஆலோசகர் வி.ரி.சகாதேவராஜா ஆலயத்திற்கான எதிர்கால  திட்ட்ம் தொடர்பாகவும் கும்பாபிஷேகத்திற்கென தெரிவான குழுக்களின் வகிபாகம் பற்றியும் அவை துரிதமாக இயங்கவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்திப்பேசினார்.ஏனைய ஆலோசகர்களான வி.ஜெயந்தன்,வா.குணாளன் ஆகியோர் கும்பாபிஷேகத்திற்கான முன்னேற்பாடுகள் குறித்து நிருவாகிகளின் ஒத்துழைப்பின் முக்கியத்துவம்பற்றிக்கூறினர்.

அவ்வாலயத்தின் மகாகும்பாபிசேகம் ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி தற்போதிருந்தே ஆலயத்தை நோக்கி பக்தர்கள் படையெடுக்கஆரம்பித்துள்ளனர்.

இந்நாட்களில் அங்கு இடம்பெற்ற ஓர் அற்புதநிகழ்வினால் ஈர்க்கப்பட்ட பக்தர்கள் அங்கு செல்லஆரம்பித்துள்ளனர். அங்குநிலவிய சர்ச்சையைத் தீர்த்துவைத்த அந்த அற்புத நிகழ்வுக்குரிய ஆலயமணியைக் காண்பதில் பக்தர்கள் கரிசனை காட்டுகின்றனர்.

வெள்ளி ,பௌர்ணமி மற்றும் விசேட திங்களில் அங்கு விஷேட பூஜை நடைபெறுவது வழக்கம்.நேற்றுமுன்தினம் வெள்ளி தினத்தில் மாவட்டத்தின் பல பாகங்களிலுமிருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் அங்கு வருகைதந்திருந்தார்கள்.

நாகபாம்பிற்கு பால் வார்க்கும் சமயசடங்கு உணர்வுபூர்வமாக இடம்பெற்றது. கூடவே பலபொங்கல் நிகழ்வுகளும் அன்னதான நிகழ்வுகளும் நேர்த்திகளும் இடம்பெற்றிருந்தன.
பக்தர்கள் அனைவரும் அன்னதானத்தில் பங்கேற்று மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர்.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours