( (காரைதீவு சகா))
வீரத்துறவி சுவாமி விவேகாநந்தர் 1897இல் இலங்கைக்குவருகைதந்தபோது வழிபட்ட, யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியிலமைந்துள்ள கதிரேசன் ஆலயத்தில் சுவாமி விவேகானந்தரின் இலங்கைவிஜயத்தின் 125ஆவது ஆண்டுநிறைவுதின விழா நேற்றுமுன்தினம் கோலாகலமாக நடைபெற்றது.
பிரதம அதிதியாக, இந்தியா கோயம்புத்தூர் ராமகிருஷ்ண மிஷன் ஶ்ரீமத் சுவாமி ஹரிவ்ரதானந்தஜீ மஹராஜ் கலந்துகொண்டு கதாப்பிரசங்கம் நிகழ்த்தினார்.
சுவாமிகளுக்கு அங்கு பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்வில் 125ஆவது ஆண்டுநிறைவு நினைவுப் படிமக்கல் நிறுவப்பட்டு சுவாமிகளால் திறந்துவைக்கப்பட்டது.
Post A Comment:
0 comments so far,add yours