சோழர்காலத்தில் நிருமாணிக்கப்பட்டு தற்போது தூர்ந்துசிதைந்துகிடக்கின்ற மடத்தடி சிவன் ஆலய முன்றலில் சிவலிங்கம் நிறுவுவதற்கான பீடமொன்றுக்கு அடிக்கல்நடும் வைபவம் நேற்றுமுன்தினம்(16)பௌர்ணமியன் று நடைபெற்றது.
கூடவே அருகிலுள்ள மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்தில் புதிதாக அம்மன் அன்னதான மண்டபத்தை அமைப்பதற்கான அடிக்கல் நடுவிழாவும் நடைபெற்றது.
சிவனருள் பவுண்டேசன் ஆதரவில் ஆலயத்தலைவர் கி.ஜெயசிறில் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் கலாநிதி எம்.கோபாலரெத்தினம், மட்டக்களப்பு ஆதீன ஸ்தாபக இயக்குனர் மு.ஜெயபாலன்,சிவனருள் பவுண்டேஷன் மாவட்ட தலைவர் தென்கிழக்குபல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் பேராசிரியை அனுசியா சேனாதிராஜா, மாவட்டச்செயலாளர் கே.வாமதேவன்,பொருளாளர் ரி.ஜனார்த்தனன் ,காத்தான்குடிபிரதேசசெயலாளர் யு.உதயசிறிதர் ,முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மா.நடராஜா ,ஆலயபரிபாலனசபைஆலோசகர்களான வி.ரி.சகாதேவராஜா ,வா.குணாளன். வ.ஜெயந்தன், மாவட்டகலாசார உத்தியோகத்தர் கு.ஜெயராஜி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு அடிக்கல் நட்டனர்.
அடிக்கல் நடப்பட்ட பீடத்தில் சிவனருள் பவுண்டேசன் அனுசரணையில் மட்டக்களப்பு ஆதீன ஸ்தாபகரும் இயக்குனருமான மு.ஜெயபாலனின் ஏற்பாட்டில் எதிர்வரும் சிவராத்திரியன்று சிவலிங்கம் பிரதிஸ்டை செய்துவைக்கப்படவிருக்கிறது.
இதேவேளை மடத்தடி மீனாட்சி அம்மன் ஆலயத்தில் விசேட பௌர்ணமி பூஜை இடம்பெற்றது. அட்டப்பளம் அறநெறி மாணவர்களின் விசேட பஜனை பேச்சு நற்சிந்தனை இடம்பெற்றன. தொடர்ந்து ஆலயபரிபாலனசபைஆலோசகர் வி.ரி.சகாதேவராஜா நெறிப்படுத்தலில் ஆலயத்தலைவர் கி.ஜெயசிறில் தலைமையில் அடியார்கள் சங்கமம் பௌர்ணமி ஒன்றுகூடலும் இடம்பெற்றது.கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் கலாநிதி எம்.கோபாலரெத்தினம் சிறப்புரை நிகழ்த்தினார். இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம் வெளியிட்ட ஆன்மீக நூல்கள் அங்கு அறநெறி மாணவர்க்கும் பிரமுகர்களுக்கும் வழங்கிவைக்கப்பட்டன.
Post A Comment:
0 comments so far,add yours