(அஸ்லம் எஸ்.மௌலானா)

கல்முனை மாநகர சபை ஒழுங்கு செய்திருந்த 74ஆவது தேசிய சுதந்திர தின விழா, இன்று வெள்ளிக்கிழமை (04) கல்முனை வாசலில் கோலாகலமாக நடைபெற்றது.

கல்முனை மாநகர சபையின் பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாகவும் மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.றகீப் கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றிவைத்தனர்.

இவர்களுடன் கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலி, கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரம்சீன் பக்கீர், மாநகர சபை உறுப்பினர்கள், அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், அரச, தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் பிரமுகர்கள் என பலரும் கொண்டிருந்தனர்.

இதன்போது சமயப் பெரியார்களின் ஆசியுரைகள் இடம்பெற்றதுடன் அவர்களை கௌரவித்து அதிதிகளினால் நினைவுப் பரிசுகள் வழங்கி வைக்கப்பட்டன. அத்துடன் நாட்டுக்காக உயிர்நீத்த படையினருக்காக இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

மாநகர சபையின் பிரதி ஆணையாளர் ஏ.எஸ்.எம்.அஸீம் நன்றியுரை நிகழ்த்தினார்.





Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours