( அஸ்ஹர் இப்றாஹிம்) 




அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களான சாய்ந்தமருது , மாளிகைக்காடு , காரைதீவு மற்றும் பொலிவேரியன் குடியேற்ற கிராமம் போன்ற இடங்களில் கட்டாக்காலி நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக அப்பிரதேச மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
மீன் சந்தைகளுக்கு அருகிலும் , கடற்கரையோரப் பிரதேசங்களிலும் , அதிகமான குப்பைகள் கொட்டப்படும் பாலங்களுக்கு அருகிலும் இக் கட்டாக்காலி நாய்களின் தொல்லை அதிகரித்துக் காணப்படுகின்றது.
இரவு நேரங்களில் வீதி மின்விளக்குகள் எரியாத பகுதிகளிலும் , சன நடமாட்டம். இல்லாமல் கைவிடப்பட்ட வளவுகளிலும் கட்டாக்காலி நாய்கள் சுற்றித்திரிவதால் இப்பகுதிகளினூடாக அச்சத்துடனேயே பொதுமக்களும் சிறுவர்களும் வயோதிபர்களும் பயணிக்க வேண்டியுள்ளது.
மாளிகைக்காடு கடற்கரை பகுதியில் வீசப்படும் மீன்களின் கழிவுகள் மற்றும் காய வைக்கப்படும் கருவாடுகள் என்பவற்றை புசிப்பதற்காக ஒன்று கூடும் நாய்களினால் அப் பிரதேசத்தில் வாழும் மக்கள் சொல்லொணா துயரங்களை தினசரி அனுபவித்து வருகின்றனர்.
பிரதான வீதிகளில் கட்டாக்காலி நாய்கள் திடீரென குறுக்கறுப்பதாலும் மோட்டார் சைக்கிள்களை பின்தொடர்ந்து துரத்துவதாலும் வீதி விபத்துக்கள் ஏற்படுகின்றன.இதனால் பலர் உபாதைகளுக்கும் உள்ளாகியுள்ளனர்., மேலும் வீதியோரங்களிலும் நடை பாதைகளிலும் மலம் கழிப்பதனாலும் பாடசாலை மாணவர்களும் பாதசாரிகளும் பல சங்கடங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இவ்விடயத்தில் துரித கவனமெடுக்க வேண்டுமென பிரதேவதசிகள் கேட்டுள்ளனர். 
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours