மட்டக்களப்பு - பட்டிப்பளை பிரதேசத்தின் இவ்வாண்டுக்கான முதலாவது அபிவிருத்திக் குழுக் கூட்டம் பின்தங்கிய கிராம பிரதேச அபிவிருத்தி, வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறுபொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சரும் பட்டிப்பளை பிரதேச அபிவிருத்திக் குழுவின் தலைவருமான சதாசிவம் வியாழேந்திரன் தலைமையில் (02) திகதி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் பிரதேச அபிவிருத்திக்குழுவின் உப தலைவர் பரமசிவம் சந்திரகுமார், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம் (ஜனா), மண்முனை தென் மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.புஸ்பலிங்கம், மண்முனை தென் மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் வை.சந்திரமோகன், மண்முனை தென் மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலாளர் திருமதி தட்சனகௌரி தினேஸ் மற்றும் பிரதேச செயலக . உயரதிகாரிகள் உள்ளிட்டோரின் பங்கு பற்றுதலுடன் நடைபெற்ற இக்கூட்டத்தில், ஏனைய திணைக்களத் தலைவர்கள், துறைசார்ந்த அரச உயர் அதிகாரிகள், கிராம மட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொலிசார், இராஜாங்க அமைச்சரின் இணைப்புச் செயலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும் இதன்போது கடந்த ஆண்டில் குறித்த பிரதேச செயலக பிரிவில மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாகவும் பிரதேசத்தின் பொருளாதாரம், விவசாயம், நீர்ப்பாசனம், கல்வி, சுகாதாரம், சமுர்த்தி, போக்குவரத்து, மீன்பிடி, இறால் பண்ணை அமைத்தல், மின்சாரம், சிறுகைத்தொழில் மற்றும் விளையாட்டு உள்ளிட்ட
சுற்றாடல் உட்பட ஏனைய அனைத்து திணைக்களங்கள் சார் விடயங்களும் ஆராயப்பட்டதுடன் அவற்றில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதுடன், இவ்வாண்டு நடைமுறைப்படுத்துவதற்காக முன்மொழியப்பட்டுள்ள திட்டங்களுக்கான அனுமதியினை பெற்றுக்கொள்வது தொடர்பாகவும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.
Post A Comment:
0 comments so far,add yours