பைஷல் இஸ்மாயில் -
திருகோணமலை – கப்பல்துறை பஞ்சகர்ம ஆயுள்வேத வைத்தியசாலைக்கு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி ஜே.ஜே. முரளிதரன் விஜயமொன்றை (11) மேற்கொண்டார்.
இந்த விஜயத்தின்போது, கப்பல்துறை பஞ்சகர்ம ஆயுள்வேத வைத்தியசாலையில் நிலவுகின்ற குறைபாடுகள் மற்றும் பிரச்சினைளை நேரடியாகச் சென்று பார்வையிட்டதுடன் அதுதொடர்பிலும் கேட்டறிந்து கொண்டார்.
இதன்போது அவர் கருத்துத் தெரிவிக்கையில், வைத்தியசாலையில் நிலவுகின்ற குறைபாடுகள் மற்றும் எவ்வகையான பிரச்சினைகளாக இருந்தாலும் அப்பிரச்சினைகளை எனது பார்வைக்கு நேரடியாகவோ அல்லது ஆணையாளர் ஊடாகவோ கொண்டுவரும்போது அதற்கான தீர்வினை மிகக் குருகிய காலப்பகுதிக்குள் தான் செய்துதருவதாகவும் இதன்போது அவர் தெரிவித்தார்.
இந்த விஜயத்தில் அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் திவாகர ஷர்மா , கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி திருமதி இ.ஸ்ரீதர் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.
Post A Comment:
0 comments so far,add yours