நூருல் ஹுதா உமர்
காரைதீவு பிரதேச மாவடிப்பள்ளியில் உள்ள கழகங்களான மாவடி மிராக்கில்ஸ், மாவடி லெஜன்ட், புலு பேர்ட்ஸ் மற்றும் மாவடி பேர்ல்ஸ் ஆகிய 4 அணிகளை கொண்டு இடம்பெற்ற இச் சுதந்திர தின சுற்றுப் போட்டியின் சம்பியனாக மாவடி பேர்ல்ஸ் விளையாட்டு கழகம் தெரிவு செய்யப்பட்டதுடன் இரண்டாம் இடத்தைப் மாவடி லெஜன்ட் அணி பெற்றுக் கொண்டது.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக மாவடி பேர்ல்ஸ் வீரர் முப்தி தெரிவு செய்யப்பட்டதுடன் தொடர் நாயகனாக மாவடி லெஜன்ட் வீரர் பர்ஷான் தெரிவு செய்யப்பட்டார். இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கல்முனை அமினாஸ் ஜுவல்ரியின் உரிமையாளர் எ.ஆர்.எம்.கியாஸ் மற்றும் கெளரவ அதிதிகளாக காரைதீவு பிரதேச சபை உறுப்பிர்களான முஸ்தபா ஜலீல், எம்.என்.எம்.றணீஸ் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours