( அப்துல் பாஸித்)
நாட்டிலுள்ள இனங்களுக்கிடையில் ஐக்கியத்தை வலியுறுத்தி நாடு முழுவதும் தனிநபராக 1407 கிலோமீட்டர் சைக்கிள் சவாரியை பொத்துவிலை சேர்ந்த சுல்பிகார் கொழும்பு சுதந்திர சதுக்கத்திலிருந்து ஆரம்பிக்கும் நிகழ்வு சர்வமத தலைவர்களின் ஆசீர்வாதத்துடன் ஆரம்பமானது.இந்த சைக்கிள் சவாரி கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம், கிளிநொச்சி, திருகோணமலை, கல்முனை, பொத்துவில், ஹம்பாந்தோட்டை ஊடாக கொழும்பை வந்தடையும்.
இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக ஜே.ஜே.பெளண்டேசன் தலைவர் டாக்டர் எம்.வை.எம்.அனீப் கலந்து சிறப்பித்தார்.
சிறப்பதிதிகளாக ஸ்ரீலங்கா உலமா கவுன்சில் தலைவர் மெளலவி முபாறக் அப்துல் மஜீத், கவிஞர் பொத்துவில் அஸ்மின், வசந்தம் தொலைக்காட்சி சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.எஸ்.எம் இர்பான், பொத்துவில் பிரதேச சபை உறுப்பினர் அப்துல் மஜீத், அறுகம்பே உல்லாச பயணத்துறை தலைவர் ஏ.எம்.ஜஃபர் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.
Post A Comment:
0 comments so far,add yours