( அஸ்ஹர் இப்றாஹிம்)
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மன்னார் , முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான காதர் மஸ்தான் அவர்களின் சென்ற வருட பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து தெரிவு செய்யப்பட்ட பொது அமைப்புகள் மற்றும் விளையாட்டு கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் மற்றும் கிறிக்கட் சீருடைகள் வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகத்தில் வைத்து அண்மையில் வழங்கி வைக்கப்பட்டது.
செட்டிகுளம் பிரதேச செயலக பிரதேச செயலாளர் அவர்களின் பங்கேற்புடன் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மன்னார் , முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான காதர் மஸ்தான் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
Post A Comment:
0 comments so far,add yours