(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு

மட்டக்களப்பு மாவட்ட செயலக ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய சங்காபிஷேக பூசை திங்களன்று (07) மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றது. 

அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட சங்காபிஷேக பூசை, மாவட்ட செயலக ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய பிரதம குரு ஜெகதீசக்குருக்கள் மற்றும் அவரது குழுவினரால் விஷேட அபிஷேக ஆராதனைகளுடன் நடைபெற்றது. ஆலய கும்பாபிஷேகம் இடம்பெற்று 5 ஆவது ஆண்டு நிறைவையொட்டி 108 சங்குகளை கொண்டு இவ் விஷேட சங்காபிஷேக நிகழ்வு இடம்பெற்றன. 

இப்பூசை நிகழ்வுகளில் ஆலய நிர்வாகத்தினரின் பங்களிப்புடன் அன்னதானம் வழங்கிவைக்கப்பட்டதுடன்  மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.





Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours