(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு

மட்டக்களப்பு மாவட்ட சமூர்த்தி உயரதிகாரிகளுக்கான One Stop பயிற்சியானது மாவட்ட செயலகத்தில் இன்று (31) இடம் பெற்றது. அரசாங்க அதிபரின் வழிகாட்டுதலுடனும்  மன்னார் மாவட்ட சமூர்த்தி  பணிப்பாளர் ஐ.அலியார் வளவாளராக இவ் பயிற்சி பாசறையினை  மேற்கொண்டார்.

 

இவ் நிகழ்வின் போது  சமூர்த்தி வாங்கியின் அண்மைக்கால செயற்பாடுகள் பற்றி உத்தியோகத்தர்களுக்கும்  மக்களுக்கும் தெளிவுபடுத்துவதற்காகவும் கிராமங்கள் வரை  கொண்டுசென்று பணிகளை  ஆரம்பித்து மக்களுக்கு  நன்மைபயக்கக்கூடிய  சேவைகளை  வழங்குவதேயாகும்.

 தற்போது கடன் திட்டங்களுக்கான  வட்டிவிதங்கள் குறைக்கப்பட்டுள்ளதுடன்  வாழ்வாதார  அபிவிருத்தி கடன் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.  மேலும் புதிய தொழில் முயற்சியாளர்களுக்கான கடன் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

பயிற்சி நெறியில் சமூர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர்கள்  மற்றும் சமூர்த்தி வங்கிகளுக்கு பொறுப்பான முகாமையாளர்களும்  மற்றும்  ஊழியர்களும்  கலந்து கொண்டனர் 

தற்போது நாடு முழுவதும் 1074 சமுர்த்தி வாங்கி கிளைகள் காணப்படுவதுடன் எமது மாவட்டத்தில் 31  கிளைகள் காணப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours