இலங்கையில் வாழும் மக்களின் சமகால வலிகளை சுமந்து கொண்டு வெளியாகி இருக்கிறது பூவன் மதீசன் குழுவினரின் பஞ்சப்பாட்டு. gas இல்ல காசில்லை கரண்ட் இல்லை பெற்றோல் இல்லை என மக்களின் அனைத்து பிரச்சனைகளையும் நளினமாக கையாண்டிருக்கிறார்கள். இந்தப் பாடலில் எந்தவொரு சமூகக்கருத்துக்களும் இல்லை என கூறிக்கொண்டு அனைத்து விதமான மக்கள் பிரச்சனைகளையும் நாசுக்காக சொல்லி இருக்கின்றனர் பாடல் குழுவினர். பூவன் மதீசனின் வடை பாடலும் கடந்த வருடம் பல நுண்ணரசியல் பேசியிருந்த நிலையில் பஞ்சப்பாட்டு வெளிப்படையாகவே மக்களின் ஆதங்கத்தை கொட்டி தீர்க்க உதவியிருக்கிறது. விளைவாக மக்கள் இந்த பாடலை சமூக வலை தளங்களில் கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள்.
பாடலின் வரிகளை தானே எழுதி இசையமைத்து பாடியிருக்கிறார் பூவன் மதீசன். தயாரிப்பு மேற்பார்வையை சிவராஜ் மேற்கொள்ள அண்மையில் வெளியாகி பெரு வெற்றி பெற்ற புத்தி கெட்ட மனிதரெல்லாம் திரைப்பட குழுவினர் மீண்டும் இந்த பாடலில் கை கோர்த்திருக்கின்றனர்.
Post A Comment:
0 comments so far,add yours