சுமன்)
புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் 05ம் 06ம் வட்டார இறைமக்களால் தவக்கால விசேட நிகழ்வாக ஏற்பாடு செய்யப்பட்ட திருச்சிலுவைப்பாதை வழிபாடு மற்றும் விசேட திருப்பலி நிகழ்வு இன்றைய தினம் புளியந்தீவு ரிதம் இளைஞர் கழக வளாகத்தில் மேற்படி வட்டாரப் பணியாளர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது செபவழிபாடு, திருச்சிலுவைப்பாதை, சுற்றுப் பிரார்த்தனை மற்றும் விசேட திருப்பலிப் பூசை என்பன இடம்பெற்றன. இவ் வழிபாட்டில் புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் பங்குத் தந்தை அருட்தந்தை ஜோர்ச் ஜீவராஜ் அடிகளாரினால் விசேட திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபையின் புளியந்தீவு தெற்கு வட்டார உறுப்பினர் அ.கிருரஜன், கிழக்குப் பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் வைத்திய கலாநிதி கே.ஈ.கருணாகரன் உட்பட வட்டாரப் பணியாளர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours