(சுமன்)


இலங்கை தமிழரசுக்கட்சியின் ஸ்தாபக தலைவர் தந்தை செல்வாவின் 124 ஆவது ஜனனதின நிகழ்வு இன்று மட்டக்களப்பு தந்தை செல்வா சதுக்கத்தில் அனுஸ்டிக்கப்பட்டது. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் சிரேஸ்ட உபதலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு கிளை மற்றும் தமிழரசு வாலிபர் முன்னணி ஆகியனவற்றின் ஏற்பாட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட இந்நிகழ்வில் மதத்தலைவர்கள், இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் கி.துரைராசசிங்கம், மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன், பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், ஞா.சிறிநேசன், சீ.யோகேஸ்வரன், டெலோவின் பிரதித்தலைவரும், கிழக்கு மாகாணசபை முன்னாள் பிரதித் தவிசாளருமான இந்திரகுமார் பிரசன்னா, புளொட்டின் மாவட்டத் தலைவரும், மண்முனை மேற்குப் பிரதேச சபையின் பிரதித் தவிசாளருமான பொ.செல்லத்துரை, இலங்கை தமிழரசுக்கட்சி வாலிபர் முன்னணித் தலைவர் கி.சேயோன், உள்ளுராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், பிரதித் தவிசாளர்கள், உறுப்பினர்கள், கட்சி உறுப்பினர்கள், வாலிபர் முன்னணியினர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது தந்தை செல்வாவின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு, மலரஞ்சலியுடன், அகவணக்கமும் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.










Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours