(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் அமுல்பபடுத்தப்பட்டுவரும் "கம சம கபி விசந்தரக்" கிராமிய அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டம் தொடர்பான முன்னேற்ற மீளாய்வு கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று (02) திகதி புதன்கிழமை இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்தி குழு இணைத்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் மாவட்ட செயலகமாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தின்போது மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு பிரதேச செயலக பிரிவுகளிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுவருகின்ற இவ் அபிவிருத்தி வேலைத்திட்டத்தினை நடைமுறைப்படுத்தும்போது எதிர்நோக்குப் பிரச்சனைகள் மற்றும் சவால்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டதுடன் அதற்கான தீர்வுகளும் முன்வைக்கபட்டுள்ளது.

தற்போது நாட்டில் எற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையிலும் இந்த அபிவிருத்தி திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதில் எந்தவகையிலும் பாதிப்பு ஏற்படாது என்று கூறப்பட்டதுடன், ஜனாதிபதியின் என்ன கருவின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற "சௌபாக்கியா அபிவிருத்தி வேலைத்திட்டம்" தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

இத்திட்டமானது மட்டக்களப்பு மாவட்டதில் வெற்றி கரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் மாவட்ட அபிவிருத்தி முன்னேற்றதுக்கு நல்ல எடுத்துக்கட்டாக அமையும் என்று மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவர் தெரிவித்திருந்தார்.

இக்கலந்துரையாடலில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.சசிகலா புண்ணியமூர்த்தி, மாவட்ட செயலக பிரதம கணக்காளர் திருமதி.இந்திராவதி மோகன் மற்றும் பிரதேச செயலாளர்கள், பிரதேச செயலக திட்டமிடல் அதிகாரிகள் உள்ளிட்ட ஏனைய துறைசார் திணைக்களங்களின் அதிகாரிகளும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours