(காரை சகா)

வரலாற்றுப்பிரசித்திபெற்ற உகந்தமலை முருகனாலயத்திற்குச்செல்லும் 19கீலோமீற்றர் தூர பாணமை பாணமை -உகந்தை பிரதான காட்டுப்பாதை 25கோடி ருபா செலவில் கொங்கறீட்வீதியாக புனரமைக்கப்படவிருக்கிறது.

வீதிபுனரமைப்பு ஆரம்பிப்பு அங்குரார்hப்பண விழா நேற்றுமுன்தினம் பாணமை மாணிக்கப்பிள்ளையார் ஆலய பிரதானவீதியில் நடைபெற்றது. அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழுத்தலைவருமான டபிள்யு.டி.வீரசிங்க பிரதம அதிதியாகக்லந்கொண்டு அடிக்கல் நட்டுவைத்து பெயர்ப்பலகையை திரைநீக்கம் செய்துவைத்தார்.

இதற்கான நிதியை அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழுத்தலைவருமான டபிள்யு.டி.வீரசிங்க ஒதுக்கியிருந்தார். 19.5கிலோமீற்றர் நீளமான வீதி எதிர்வரும் 3மாத காலத்தில் 249மில்லியன் ருபா செலவில் வீதிஅபிவிருத்தி அதிகாரசபையால் புனரமைக்கப்படவிருக்கிறது.

பொத்துவில் பிரதேசசபையின் உபதவிசாளர் பெருமாள் பார்த்தீபன் மற்றும் உறுப்பினர்கள் விடுத்த வேண்டுகோளுக்கமைவாக இந்நீண்டகால கோரிக்கை நிவர்த்திசெய்யப்பட்டுள்ளது.
அங்குரார்ப்பணநிகழ்வில் பொத்துவில் பிரதேசசபை உறுப்பினர்களான த.சுபோதரன் எஸ்.துரைரெட்ணம் வி.சசிதன் உள்ளிட்ட உறுப்பினர்கள் லாகுகலை பிரதேசசபை உறுப்பினர்கள் வீதிஅபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

இவ்வீதியால் தினமும் பல்லினத்தவரும் ஆலயத்திற்கும் விகாரைக்கும் குமண பறவைகள் சரணாலயத்திற்கும் பலத்த சிரமத்தின் மத்தியில் பயணிப்பது வழக்கம்.இதைவிட கதிர்காம பருவகாலத்தில் ஆயிரக்கணக்கானோர் வாகனங்கள் மூலமும் பாதயாத்திரைமேற்கொண்டும் பயணிப்பது வழமை.

கடந்தகாலங்களில் பருவவெள்ளம் காரணமாக அடிக்கடி சேதமடைவதும் மென்ரகவாகனங்கள் பயணிக்கமுடியாமலிருப்தும் அல்லாடுவதும் தெரிந்ததே.
இவ்வீதி கொங்கிறீட் வீதியாக மாற்றியமைக்கப்படவேண்டுமென பலரும் முயற்சித்தபோதிலும் அது கைகூடவில்லை. தற்போது உபதவிசாளர் பார்த்தீபனின் முயற்சிகைகூடியுள்ளது.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours