(எஸ்.அஷ்ரப்கான் - 07601 2 324 2)
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியால யத்தில் ஒரு மாணவன் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடை ந்துள்ளார்.
இந்த வருடம் நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகளின்படி சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலய மாணவன் அஷ்ரப் முஹம்மது ஜும்ரி 165 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளார். பரீட்சையில் தோற்றிய 38 மாணவர்களில் 26 மாணவர்கள் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர்.
வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்ற மாணவரையும் அவருக்கு கற்பித்த ஆசிரியர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு அதிபர் எம்.சைபுதீன் தலைமையில் பாடசாலையில் இன்று (14) இடம்பெற்றது. தரம் 5 வகுப்புக்கு கல்வி கற்பித்த வகுப்பாசிரியை திருமதி யு.ஆர்.எப்.நகீப், மற்றும் மேலதிக வகுப்புக்களுக்கு உறுதுணை புரிந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்களான எம்.எம்.எப்.றினோஷா, எஸ்.எம்.சபான் மற்றும் ஆங்கில பாடம் கற்பித்த முஹம்மட் நாசர் மற்றும் பகுதித்தலைவர் முஹம்மட் ஹனீபா, முஹம்மது மாஹிர் ஆகியோர் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களால் பாராட்டி கௌரவிக் கப்பட்டனர்
Post A Comment:
0 comments so far,add yours