சம்மாந்துறை நிருபர் .எல்.எம் நாஸிம்


சம்மாந்துறை பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட 51 கிராம சேவையாளர் பிரிவுகளில் மாணவர்களின்மகிழ்ச்சிகரமான கற்றலுக்கு  உதவுதலை நோக்காக கொண்டு மாணவர்களுக்கு  சமூ சேவைஅமைப்புக்களினால் 

ஐந்தாம் கட்டமாக கற்றல் உபகரணங்கள்,புத்தக பை வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று முந்தினம்(18) சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் ஹனிபா  தலைமையில் அல் அர்சத் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.


தாய்,தந்தைகளை இழந்த,சமூர்த்தி பெறுகின்ற தெரிவு செய்யப்பட்ட  மாணவர்களுக்குஐந்தாம் கட்டமாக இக்கற்றல் உபகரணங்கள்,புத்தக பை வழங்கி வைக்கப்பட்டது.


இன் நிகழ்வில் பிரதம அதிதியாக னவள மற்றும் வன ஜீவராசிகள் இராஜாங்க அமைச்சு மேலதிக செயலாளர்ம்.எம் நசீர்,உதவி பிரதேச செயலாளர் யு.எம் அஸ்லம்  , கணக்காளர் .எம் பாரீஸ்கிராம சேவைஉத்தியோகத்தர்கள் மற்றும் விடயத்துக்கு பொறுப்பான உத்தியோகத்தர்கள், பெற்றோர்கள் என குறிப்பிட்ட அளவானோர் கலந்துகொண்டனா்.


 இன் நிகழ்வில்  பிரதம அதிதியாக கலந்து கொண்ட வனவள  மற்றும் வன ஜீவராசிகள் இராஜாங்க அமைச்சு மேலதிகசெயலாளர் எம்.எம் நசீர் அவர்களின் சேவையை பாராட்டி பொன்னாடை போர்த்திநினைவுச்சின்னம் வழங்கிகௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours