( அஸ்ஹர் இப்றாஹிம்)


அம்பாறை ஹாடி உயர் தொழில்நுட்ப  நிறுவனத்தின் ஸ்தாபகரும் கனடாவைச் சேர்ந்த பேராசிரியருமான  ஈவன் ஏ ஹாடி அவர்களின் 65 ஆவது சிரார்த்த தினம் அண்மையில் அம்பாறையில் விமரிசையாக இடம்பெற்றது.

பேராசிரியர் ஈவன் ஏ ஹாடி ஐக்கிய நாடுகள் சபை மூலம் இலங்கையில் வரண்ட பகுதிகளில் விவசாய நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்காக கனடாவிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்டு கல்லோயா திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தில் விவசாய நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கு காரணமாகவிருந்த  பிரதானியாவார்.

1963 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தொழில்நுட்ப அறிவை மாணவர்களுக்கும் விவசாயிகளுக்கும் வழங்குவதற்காக அம்பாறையில் தொழில்நுட்பக் கல்லூரி ஒன்றை நிறுவினார். இதனால் இப்பிரதேச மாணவர்களாலும் விவசாயிகளாலும் பெரிதும் போற்றி மதிக்கப்பட்டார்.

அவர் இறந்ததும் அம்பாறை தொழில்நுட்பக்கல்லூரி வளாகத்தில் தனது புதவுடலை அடக்கம் செய்யுமாறு பணித்திருந்தார். அதனால் அன்னாரை நினைவு கூரும் வகையிலும் கௌரவப்படுத்தும் வகையிலும் இத் தொழில்நுட்பக் கல்லூரிக்கு ஹாடி  தொழில்நுட்ப கல்லூரி என்று பெயர் சூட்டப்பட்டதுடன் , இன்று அது ஹாடி உயர் தொழில்நுட்ப நிறுவனமாக புதிய பரிணாமம் பெற்றுள்ளது.

இந்நிகழ்வில் அம்பாறை ஹாடி உயர் தொழில்நுட்ப நிறுவனத்தின் அதிபர் , விரிவுரையாளர்கள் , கல்விசாரா உத்தியோஸ்தர்கள் , தற்போது கல்வி பயிலும் மாணவர்கள் , பழைய மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours