(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
உலகத் தமிழர் வம்சாவளி அமைப்பின் 8 ஆவது ஆண்டு சர்வதேச மாநாட்டு நிகழ்வு சென்னை சர்வதேச வர்த்தக மண்டபத்தில் (11) இடம்பெற்றது.
அமைப்பின் தலைவர் செல்வக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், விழுப்புரம் வடக்கு திமுக மாவட்ட செயலாளரும் தமிழக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான், இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் இந்தியாவின் VIT பல்கலைக்கழகத்தின் தலைவர் கலாநிதி ஜீ. விஸ்வநாதன், ஐடிஎம் நேசன் நிறுவனத் தலைவர் கலாநிதி வி. ஜனகன், சர்வதேச இசைக் கல்விக்கான பயிற்சி நிலையத்தின் இலங்கை தூதுவரும் அகில இலங்கை கிறிஸ்தவ ஒன்றியத்தின் தலைவருமான அதிவண/ பிதா அருட்கலாநிதி எஸ். சந்ரு பெர்னாண்டோ, பிரபல பட்டிமன்றப் பேச்சாளர் ஐ. லியோனி, தினகரன் பிரதம ஆசிரியர் செந்தில் வேலவர் உட்பட இந்த மாநாட்டில் உலகத்தில் பல பாகங்களில் இருந்து தமிழ் தலைவர்களும் தமிழ் வர்த்தக பிரமுகர்களும் மற்றும் கல்வியாளர்களும் பங்குபற்றியிருந்தனர்.
உலகத் தமிழர் வம்சாவளி அமைப்பானது ஆண்டு தோறும் உலகம் முழுவதும் பரந்துவாழும் தமிழர்களை ஒன்றிணைத்து சர்வதேச மாநாடுகளை நடாத்தி, திறமையான தமிழர்களை அடையாளப்படுத்துவதும், அவர்களுக்கான விருதுகளையும் வழங்கி வருகின்றது.
Post A Comment:
0 comments so far,add yours