நூருல் ஹுதா உமர்
அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட லீக்கினால் நடாத்தப்படும் B பிரிவு கழகங்களுக்கிடையில் லீக் அடிப்படையிலான போட்டிகளின் ஆரம்ப போட்டி வெள்ளிக்கிழமை (11) இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் பிரதி பொதுச் செயலாளரும், அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட லீக்கின் பொதுச் செயலாளரும், கல்முனை மாநகர சபை உறுப்பினருமான எம்.ஐ.எம். அப்துல் மனாப் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதி தேசிய அமைப்பாளரும், நிந்தவூர் பிரதேச சபை தவிசாளருமான எம்.ஏ.எம். அஸ்ரப் தாஹிர் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். மருதமுனை மருதம் அணிக்கும் மருதமுனை க்ரீன் மெக்ஸ் அணிக்குமிடையிலான முதலாவது போட்டி பிரதம அதிதியினால் கைலாகு செய்யப்பட்டு நினைவுப் புகைப்படம் எடுக்கப்பட்டு ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதில் மருதமுனை மருதம் அணி 7:0 என்ற புள்ளி வித்தியாசத்தில் வெற்றியை தனதாக்கிக் கொண்டது.
Post A Comment:
0 comments so far,add yours