சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சம்மாந்துறை பிரதேசசெயலக கலாசார பிரிவு மற்றும் திறனொளி கலை கலாசார ஊடகவலையமைப்பு இணைந்து "மகளிர் தின கலையரங்கு "எனும் கருப்பொருளில் மகளிர் தின நிகழ்வுகள் சம்மாந்துறை பிரதேச செயலக வளாகத்தில்  நேற்று  (08)   பிரதேச செயலாளர் எஸ்.எல் ஹனிபா தலைமையில் நடை பெற்றது.


இன் நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளணி மற்றும் பயிற்சி  பிரதிப் பிரதம செயலாளர் ஆர்.யு ஜெலீல்,சம்மாந்துறை பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் யு.எல் அஸ்லம்,கணக்காளர் ஐ.எல் பாரிஸ்,சம்மாந்துறை பிரதேச செயலக மேலதிக மாவட்ட பதிவாளர் ஏ.கே றினோசா மற்றும் சம்மாந்துறை பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தகர் ஏ.எச் அஹமட் அம்ஜத்,கலாசாரப்பிரிவு அபிவிருத்தி உத்தியோகத்தகர் ஏ.பி பெனாஸிர் ஜஹான், மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தகர் எம்.எம் ஜெஸிலா நஸ்றி என பலர் கலந்து கொண்டனர்.

பெண்களின் முக்கியத்தும், சாதனைகள், மேம்பாட்டு வேலைத்திட்டங்கள் தொடர்பிலான பிரதான உரைகள் இடம்பெற்றதுடன் கலந்து கொண்ட பெண் ஆளுமைகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கபட்டமை  குறிப்பிடத்தக்கது.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours