(க.விஜயரெத்தினம்)

உலக மலேரியா தினத்தை முன்னிட்டு பாடசாலை மாணவர்களுக்கிடையிலான சித்திரப்போட்டியில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கான சான்றீதழ்களையும்,பரிசில்களையும் பாடசாலைகளுக்கு வழங்கப்படுகின்றது.

உலக மலேரியா தினத்தை முன்னிட்டு கடந்த ஆண்டு(2021) சித்திரை மாதம் 25ஆம் திகதி மலேரியா தடை இயக்க தலைமைக்காரியாலயத்தின்  அனுசரணையுடன் மட்டக்களப்பு பிராந்திய மலேரியா தடை இயக்க அலுவலத்தினால் சித்திரப்போட்டி நடாத்தப்பட்டது.

இச்சித்திரப்போட்டியானது பிராந்திய மலேரியா தடை வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி ஈ.சிறிநாத் தலைமையில் நடைபெற்ற போட்டியில் 598 போட்டியாளர்கள் கலந்துகொண்டார்கள்.இச்சித்திரப்போட்டியானது வயது 11முதல் 15வரையுமுள்ள மாணவர்களே கலந்துகொண்டார்கள்.

இப்போட்டியில் முதல் மூன்று இடங்களைப்பெற்ற மாணவர்களுக்கான சான்றீதழ்களையும்,பரிசில்களையும் மட்டக்களப்பு பிராந்திய தடை இயக்க அலுவலகத்தால் பொறுப்பான பாடசாலைகளுக்கு சென்று தற்போது வழங்கப்பட்டுள்ளது.மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் தெரிவு செய்யப்பட்ட போட்டியாளர்களுக்கு சான்றீதழ்களை அதிபர் இராசதுரை பாஸ்கரிடம் சான்றீதழ்களை இன்றையதினம் (10)வழங்கி வைத்தார்கள்.







Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours