—-

(எம்.என்.எம். அப்ராஸ் )

அம்பாறை மாவட்டத்தில் இனங்களிடையே சமுகநல்லிணக்கத்தை எற்ப்படுத்தும் முகமாக சமாதானமும் சமூக பணி நிறுவனத்தின் (PCA)
அனுசரணையில் பல்லின சமூகங்களை ஒன்றினைத்து இயங்கி வரும் அம்பாறை மாவட்ட நல்லிணக்க குழு மற்றும் பிரதேச நல்லிணக்க குழுக்களின் எற்ப்பாட்டில் நல்லிணக்ககுழு உறுப்பினர்களுக்கான ,மாவட்டத்தில் உள்ள பௌத்தம்,இந்து,இஸ்லாமிய,கத்தோலிக்க ஆகிய நான்கு  மதஸ்தளங்களுக்கு விஜயம் செய்யும் ஒரு நாள்  நல்லிணக்க கள பயணம் நேற்று   (17) இடம்பெற்றது .

ஆரம்பமாக நிந்தவூர் ஜும்மா பெரிய பள்ளிவாசலுக்கு விஜயம் மேற்க்கொண்ட அம்பாறை மாவட்ட நல்லிணக்க குழு உறுப்பினர்கள் பள்ளிவாசலை பார்வையிட்டதுடன் பள்ளிவாசலின் இடம்பெறும் சமய விடயங்கள்  பற்றி இஸ்லாமிய மத போதகரால்விளக்கமளிக்கப்பட்டது.

தொடர்ந்து அக்கரைப்பற்ரை நோக்கி ஆரம்பமான பயணம் அக்கரைப்பற்று மாநகரில் நல்லிணக்க விழிப்புணர்வு நடை பவனி  இடம்பெற்றதுடன் பொது  மக்களுக்கு சக வாழ்வு தொடர்பான நல்லிணக்க  விழிப்புணர்வு துண்டுப்பிரசுரம் வழங்கி வைக்கப்பட்டது.

தொடர்ந்து நல்லிணக்க குழு உறுப்பினர்கள் 
பொத்துவில் முஹுது மகா விகாரைக்கு சென்று பார்வையிட்டதுடன் பெளத்த விகாரையில் இடம்பெறும்  சமய விடயங்கள் பற்றி பௌத்த மத போதகரால் விளக்கமளிக்கப்பட்டது.
   

தொடர்ந்து உகந்தை முருகன் ஆலயத்துக்கு  சென்று பார்வையிட்டதுடன் கோவிலில் இடம்பெறும் சமய விடயங்கள் பற்றி கோவில் மத போதகரால் விளக்கமளிக்கப்பட்டது.

பின்னர் இறுதியாக திருக்கோவில் மெதடிஸ்
தேவாலயத்துக்கு விஜயம் இடம்பெற்றதுடன் தேவாலயத்துக்குள் இடம்பெறும் கிருஸ்த்தவ
சமய விடயங்கள் பற்றி  கிருத்தவ மத போதகரால் 
விளக்கமளிக்கப்பட்டது.

சமாதனம் மற்றும் சமூகப்பணி நிறுவன தேசிய இணைப்பாளர் த. தயாபரன்,சமாதானம் மற்றும் சமூக பணி நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் டி.இராஜேந்திரன் உட்பட நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர்கள்,மாவட்ட நல்லிணக்க குழு இணைப்பாளர்கள், பிரதேச நல்லிணக்க மன்ற இணைப்பாளர்கள், மத பெரியார்கள்   உட்பட 
கல்முனை,கல்முனை வடக்கு,சாய்ந்தமருது , நீந்தவூர்,காரைதீவு ,உகன,அம்பாரை ஆகிய 07 பிரதேச செயலக பிரிவில்  உள்ள  நல்லிணக்க குழு உறுப்பினர்கள்,பிரதேச  நல்லிணக்க குழு இளைஞர் , யுவதிகள் என பலரும் கலந்து கொண்டனர். 

இதேவேளை  சமாதானமும் சமூக பணி நிறுவனத்தின் மூலம் அம்பாறை மாவட்டத்தில் சமூக நல்லிணக்கம் தொடர்பில் பல்வேறு வேலைத் திட்டங்கள் இடம்பெற்றுவருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours