(எஸ்.அஷ்ரப்கான்-)


ஒலுவில் அல்- ஹம்றா மகா வித்தியாலய தேசிய பாடசாலை மாணவன் ; தேசிய மாணவர் சிப்பாய்கள் படையணி பொலீஸ் கடெற் பிரிவில் சாஜன் தரத்துக்கு பதவி உயர்வு பெற்றுள்ளார்.

தரம் 9 இல் கல்வி கற்கும் ஏ.எல்.ரினோஸ் என்ற மாணவனே இவ்வாறு சாஜன் தரத்திற்கு பதவி உயர்வு பெற்றுள்ளார்.

இவருக்கான சாஜன் பயிற்சி, கடந்த 02.03.2022 தொடக்கம் 03.02.2022 தொடக்கம் 07.03.2022  வரையான காலப்பகுதியில் பதுளை மாவட்டத்தின் பொறலந்தை நகரத்தில் அமைந்துள்ள இலங்கை போலீஸ் பயிற்சி பாடசாலையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

இம்மாணவனை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு இன்று (14) திங்கட்கிழமை
பாடசாலையில் அதிபர் யு.கே.அப்துர் ரஹீம்  தலைமையில்  இடம்பெற்றது. 

இதற்கான  அனுமதியை வழங்கி ஒத்துழைத்த பாடசாலையின் அதிபர் அஷ்ஷெய்க் யூ.கே.அப்துர் ரஹீம் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களான ஏ.எம்.எம் கியாஸ், ஆர். நெளஷாத் ஆகியோருடன் விளையாட்டு பயிற்றுவிப் பாளர்களான ஏ.ஏ.அஸ்மத் ஸஹி, எம்.முனாஸிர் உட்பட இப்பயிற்சியினை வழங்கும் பொலீஸ் கடெற் இன்ஸ்பெக்டர் எஸ்.சுதர்சன் ஆகியோருக்கும் பாடசாலை சமூகம் சார்பில் மனமார்ந்த நன்றிகளை தெரிவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours