i(காரைதீவு சகா)
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில்.திருக்கோவில் பிரதேச செயலகம் நடாத்தும் தெய்வீக கிராம நிகழ்வு நேற்று முன்தினம்(13) ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.
திருக்கொவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற விழாவில் திருமுன்னிலை அதிதியாக .பிரதமரும் புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சருமாகிய கௌரவ மஹிந்த ராஜபக்ஷ அவர்களது இந்து மத விவகாரங்களுக்கான இணைப்பாளர் சிவஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா கலந்துசிறப்பித்தார்.
ஆன்மீக அதிதிகளாக சிவஸ்ரீ நீ. அங்குசநாத குருக்கள் சிவஸ்ரீ ந. பத்மலோஜன் சர்மா ஆகியோர் கலந்து ஆசிர்வதித்தனர்.
பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் . ஜே.எம்.ஏ.டக்லஸ் கௌரவ அதிதியாக மேலதிக அரசாங்க அதிபர் வே.ஜெகதீஸன் சிறப்பு அதிதிகளாக பிரதேசசெயலர் ரி.ஜே.அதிசயராஜ்(கல்முனைவடக்கு. ) கலந்துசிறப்பித்தனர்.
முதலில் தம்பிலுவில் பிரதான வீதி மத்திய சந்தைக்கு அருகாமையில் அறநெறிப் பாடசாலை விழிப்புணர்வு பதாதை திரை நீக்கம் செய்துவைக்கப்பட்டது. தொடர்ந்து .கலை கலாசார பாரம்பரிய பண்பாட்டு ஊர்வலம் இடம்பெற்று .நந்திக் கொடியேற்றம் ,அறநெறிக் கீதம்,ஆலய வழிபாடு. இடம்பெற்று நினைவுக்கல் திரைநீக்கம் செய்துவைக்கப்பட்டது.
பின்பு ,கோமாதா பூசை, ஞாபகார்த்த புனித மரநடுகை, பிடியரிசி சேமிப்பு ,சூர்ய நமஸ்காரம் ,அறநெறி பாடசாலை மாணவர்களுக்காக வெளியிடப்பட்ட பாடநூல் கண்காட்சி என்பன ஆலயவளாகத்தில் இடம்பெற்றது.
உரைனளைத்தொடர்ந்து அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கு 'தெய்வீக அன்புச் சிறார்கள் ' திட்டத்தின் கீழ் பரிசில்கள் வழங்குதல், அன்னதானம், நந்திக்கொடியிறக்கம் இடம்பெற்று இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்கள மாவட்டஇந்துகலாசார உத்தியோகத்தர் கு.ஜெயராஜ் நன்றியுரையாற்றினார்.
Post A Comment:
0 comments so far,add yours