பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)
அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் உள்ள சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கட்டுப்பாடுகளுடன் எரிபொருட்கள் வழங்கப்பட்டு வருவதுடன் சில இடங்களில் இல்லை என்ற வாசகத்தினால் பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
அத்துடன் தற்போது மின்சாரம் சுழற்சி முறையில் தடைப்படுவதனாலும் எரிபொருள் நிலையங்கள் சில மூடப்பட்டுள்ளதை இன்று அவதானிக்க முடிகின்றது.மேலும் பொலிஸார் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் வாகனங்கள் வரிசையில் நிற்கும் போது போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.
எரிபொருள் இன்மையினால் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் முன்பாக என்றுமில்லாதளவில் நீண்ட வரிசைகளில் மக்கள் முண்டியடிக்க ஆரம்பித்துள்ளனர்.இதனால் சில எரிபொருள் நிரப்பு நிலையங்களின் கையிருப்பு சடுதியாக தீர்ந்ததாக தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்ட சமயங்களில் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் முன்பாக நின்ற வரிசைகளை விட தற்போதே நீளமான வரிசைகளில் மக்கள் நிற்பதை அவதானிக்க முடிகிறது
Post A Comment:
0 comments so far,add yours