(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு
"நாடும் தேசமும் உலகமும் அவளே" என்ற தொனிப்பொருளில் இன்றைய தினம் சர்வதேச ரீதியாக அனுஸ்டிக்கப்படுகின்ற மகளிர் தினத்தையொட்டிய நிகழ்வு மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகத்திலும் இடம்பெற்றுள்ளது.
மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் திருமதி.தெட்சணகௌரி தினேஷ் அவர்களின் தலைமையில் பொதுச்சந்தை கட்டட வளாகத்தில் மகளீர் தின நிகழ்வுகள் இடம்பெற்றது.
இதன்போது மண்முனை தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர், உதவி பிரதேச செயலாளர், கணக்காளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர், சமுர்த்தி தலைமை முகாமையாளர், பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் பிரதேச அபிவிருத்தி வங்கி முகாமையாளர்கள் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர்.
சர்வதேச மகளிர் தின நிகழ்வில் பெண் தொழில் முயற்சியாளர்களின் விற்பனை கூடங்கள் நிறுவப்பட்டு கண்காட்சியும் விற்பனையும் இடம்பெற்றது.
அத்தோடு மகளிர் தின நிகழ்வில் பங்குபற்றிய உற்பத்தியாளர்களை கௌரவிக்கும் முகமாக பிரதேச செயலாளர் உள்ளிட்ட அதிதிகளினால் பரிசில்கள் வழங்கி கௌரவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours