இ.சுதா
சர்வ தேச மகளிர் தினத்தில் சர்வதேச ரீதியாக பெண்களுக்கான உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.அதற்கான சட்ட வரையறைகள் காணப்படுகின்ற போதிலும் பெண்களின் உரிமையுடன் கூடிய பாதுகாப்பு கேள்விக்குறியாக மாற்றம் பெற்று வருகின்றது.இந்நிலைமை மாற்றப்பட்டு பெண்மைக்கான தனித்துவமானது பேணப்பட வேண்டும்.
சர்வதேச மகளிர் தினத்தினை சிறப்பிக்கும் முகமாக போரதீவுப்பற்று பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த மகளிர் தின நிகழ்வு இன்றைய தினம் (8) பிரதேச செயலாளர் இ. ராகுலநாயகி தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் அரச திணைக்கள அதிகாரிகள் மற்றும் மகளிர் அமைப்புக்களின் பிரதி நிதிகள், பொது மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே Support நிறுவனப் பணிப்பாளரும் ,ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பட்டிருப்புத் தொகுதி முகாமையாளரும்,மனித உரிமைகள் துறையின் நீண்ட கால தேசிய வளவாளருமான சாமசிறி தேசகீர்த்தி க.சிறிக்குமார் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கும் போது மகளிர் ஆண்களுக்கு சரிநிகர் சமமாகப் போற்றப்பட வேண்டியது மாத்திரமல்லாது கெளரவிக்கப் பட வேண்டியவர்கள் தாய்மைக்கு நிகராக உலகில் எதுவுமே இல்லை இன்று ஆண்களுக்கு நிகராக பல் துறைகளிலும் மகளிர் சாதித்து வருகின்றனர்.அவர்களின் ஆளுமைத் திறன் மேலானது இருப்பினும் பல சந்தர்பங்களில் பெண்களின் உரிமைகள் மறுக்கப்பட்டிருக்கின்றன.இலங்கையில் மாத்திரமல்ல சர்வ தேசத்திலும் பெண்களின் பாதுகாப்பானது கேள்விக்குறியாகவுள்ளது சட்ட ரீதியாக மகளிர் உரிமைகள் மீறப்படுகின்ற போது பாதிக்கப்படுகின்ற மகளிருக்கு நியாயம் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும்.அதற்காக இந்நாளில் உறுதி வழங்குவோம் எனத் தெரிவித்தார்.
Post A Comment:
0 comments so far,add yours