(எஸ்.அஷ்ரப்கான்)
அம்பாறை பாலமுனையின் முள்ளி மலையில் அத்துமீறி பௌத்தவிகாரை அமைக்கும் நடவடிக்கையினை பிரதேச அரசியல்வாதிகள், பொதுமக்கள் தடுத்து நிறுத்திய சம்பவம் குறித்த பிரதேசத்தில் இன்று (09) இடம் பெற்றுள்ளது.
பாலமுனை முள்ளி மலைக்கு அருகாமையில் விகாரை அமைப்பதற்குரிய வேலைத்திட்டத்தினை ஆரம்பிப்பதற்கு பெளத்த பிக்குகள் அடங்கிய சிங்களவர்கள் குறித்த இடத்திற்கு வருகை தந்ததையடுத்து, அங்கு வருகை தந்த அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் ஏ.எல். அமானுள்ளாஹ் உட்பட முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை,
சட்டத்தரணி எம்.ஏ.அன்சில், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் உட்பட பிரதேச அர சியல்வாதிகள் பலரும் பிரசன்னமாகியிருந்ததுடன் அட்டாளைச்சேனை பிரதேச செயலாலருடன் தொடர்பு கொண்டு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரின் கவனத்திற்கு விடயம் கொண்டு வரப்பட்டதுடன் இம்முயற்சி தடுத்து நிறுத்தப் பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
அம்பாறை மாவட்டத்தின் வரலாற்றுத் தொல்லியல் பூமியான முள்ளிக்குளம் மலை அடிவார முஸ்லிம்களுக்கு சொந்தமானகாணிகளுள்ள பகுதியில் இரவோடு இரவாக அத்திவாரம் வெட்டப்பட்டு விகாரை அமைக்கும் பணிக்கான ஒழுங்குகள் நடைபெற்ற வேளை இன்று காலை பிரதேச பொதுமக்கள் உள்ளூர் அரசியல்வாதிகள் சமூக செயற்பாட்டாளர்கள் இளைஞர்கள் தலையீட்டில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
Post A Comment:
0 comments so far,add yours