(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு
அரசாங்கத்தின் சுபீட்ஷத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக இதயங்களை ஒன்றிணைக்கும் கிராமிய பாலங்களை அபிவிருத்தி செய்யும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் அவர்களின் முன்மொழிவிற்கு அமைவாக கிராமிய வீதி அபிவிருத்தி உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் பெரிய கல்லாற்றில் அமைக்கப்படவுள்ள பாலத்திற்கான அபிவிருத்தி பணிகள் இராஜாங்க அமைச்சரினால் நேற்று (02) திகதி புதன்கிழமை அடிக்கல் நாட்டி ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.
பெரியகல்லாறு கிராமத்தில் அமையப்பெற்றுள்ள அன்னை வேளாங்கண்ணி ஆலயத்திற்குச் செல்லும் வீதியில் மிக நீண்டகாலமாக சிதைவடைந்த நிலையில் காணப்பட்ட பாலமே ஒன்றரைக் கோடி ரூபா செலவில் அப்பகுதி மக்கள் இராஜாங்க அமைச்சரிடம் முன்வைத்த வேண்டுகோளுக்கு அமைவாக புனரமைப்பு செய்யப்படவுள்ளது.
பின்தங்கிய கிராம பிரதேச அபிவிருத்தி, வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறுபொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு அபிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைத்த இந்நிகழ்வில் வீதி அபிவிருத்தித் திணைக்கள அதிகாரிகள், இராஜாங்க அமைச்சரின் இணைப்புச்செயலாளர்கள் கிராமிய சங்கங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
Post A Comment:
0 comments so far,add yours