ஈழ வள நாட்டின் தென் கோடியிலே கோயில் கொண்டு அருள் பாலித்து கொண்டிருக்கும் நிந்தவூர், மாட்டுப்பளை அருள் மிகு ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்தில் நாளை (6) ஞாயிற்றுக்கிழமை மகா கணபதி மற்றும் சண்டி ஹோமம் நடைபெறவிருக்கிறது.
நாளை காலை கிரியாதிலகம், கிரியாகால கலாமணி விபுலமணி சிவ ஸ்ரீ சண்முக மகேஸ்வரக்குருக்க களின் தலைமையில் நடைபெறவிருக்கிறது.
ஆலய தலைவர் கி.ஜெயசிறில் மற்றும் நிர்வாக சபையினரின் ஏற்பாட்டில் நடைபெறும் கணபதி சண்டி ஹோமம் நாளை காலை 11 மணி அளவில்இடம்பெற இருக்கின்றது,
கும்பாபிஷேகத்திற்கு முன்னதாக, தடை பிசகுகளை நீக்குமுகமாக இது நடாத்தப்படுகிறது.
Post A Comment:
0 comments so far,add yours