( அஸ்ஹர் இப்றாஹிம்)


மன்னார் மாவட்டம் ஈன்றெடுத்த இலங்கை தேசிய உதைப்பந்தாட்ட அணியின் வீரர் அமரர்  டக்சன் பியூஸ்லஸ் அவர்களின் மறைவானது இலங்கையின் உதைப்பந்தாட்ட விளையாட்டில் பாரிய வெற்றிடத்தை தோற்றுவித்துள்ளது. துணிவும், தன்னம்பிக்கையும் தன்னகத்தே கொண்ட டக்சன் பியூஸ்லஸ் கழகமட்ட போட்டிகளில் விளையாடி தனது திறமைகளை வெளிக்காட்டி இலங்கை தேசிய உதைப்பந்தாட்ட அணியில் இடம்பிடித்து பல்வேறு விருதுகளை தன்வசப்படுத்திய ஒரு வீரர் ஆவார். திறமையாலும் விருதுகளாலும் பிறந்த மண்ணுக்கும் தாய் நாட்டிற்கும் பெருமை சேர்த்த இவரின் இழப்பு இன்று உதைப்பந்தாட்ட ரசிகர்கள் மத்தியில்  சொல்லொணாத் துயரத்தை  விதைத்து விட்டுச் சென்றுள்ளது. இவரின் மறைவினால் துயருற்றிருக்கின்ற அன்னாரின் குடும்பத்தினர், நண்பர்கள், விளையாட்டு ரசிகர்கள் ஆகியோருக்கும் எனது ஆழ்ந்த இரங்களைத் தெரிவித்துக் கொள்வதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான பிவிருத்திக் குழு தலைவருமான காதர் மஸ்தானின் அனுதாப செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours