( அஸ்ஹர் இப்றாஹிம்)
அதிமேதகு ஜனாதிபதியின் 'சுபீட்சத்தின் நோக்கு' கொள்கை பிரகடனத்துக்கு அமைவாக முல்லைத்தீவு மாவட் டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட குமாரபுரம் கிராமத்தில் சௌபாக்கியா உற்பத்தி கிராமம் அண்மையில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவருமான காதர் மஸ்தான் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.13 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் உள்ளூர் உத்பத்தியை ஊக்குவிக்கும் பொருட்டு இத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் பால் உற்பத்தி, தேங்காய் எண்ணெய் உற்பத்தி, அரைக்கும் ஆலை, சிறுதானிய உற்பத்தி முதலானவை ஆரம்பித்து வைக்கப்பட்டது. அத்தோடு இந்த உற்பத்தி நிலையத்திற்கான 223 மீட்டர் வீதியும் புனரமைத்துக் கொடுக்கப்பட்டது.
மேலும் இதன்போது துறை சார்ந்து பயிற்சியினை நிறைவு செய்த உற்பத்தியாளர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இத் திட்டத்தின் மூலம் மொத்தமாக 87 பயனாளர்கள் பயனடையவுள்ளனர். நேரடிப் பயனாளராக 53 பேரும் மறைமுகப்பயனாளராக 34 பேரும் பயனடைய உள்ளனர்.
இந் நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் , மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், கரைதுறைபற்று பிரதேச செயலாளர், மாவட்ட செயலக உதவித் திட்மிடல் பணிப்பாளர், பிரதேச செயலகத்தின் உதவித் திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச சபை வட்டார உறுப்பினர், கிராம அலுவலகர்கள், பயனாளர்கள், கிராம மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours