இ.சுதாகரன்,செ.பேரின்பராசா
தாய் நாட்டினை இரண்டாகப்பிரிக்காது ஒரே நாட்டினுள் சுயநிர்ணய உரிமையோடு எங்களை நாங்களே ஆழக்கூடிய பொறி முறையுடன் கூடிய அதிகாரப்பகிர்வு மூலமாக வடகிழக்கு பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும்.
துறைநீலாவணையில் ஞாயிற்றுக்கிழமை மாலை இலங்கைத் தமிழரசுக்கட்சியின் வாலிபர் முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பின் போது கருத்துத் தெரிவிக்கும் போதே யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதிச் சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழரசுக் கட்சி தமிழ் மக்களின் உரிமைக்காக போராடுகின்ற கட்சி மட்டுமல்லாது தமிழ் மக்கள் உரிமைகள் மறுக்கப்படுகின்ற போது தட்டிக் கேட்டு உரிமையினை நிலைநாட்டப் போராடுகின்ற கட்சி இது தமிழ் மக்களின் குருதியில் உறைந்த விடயம்.வீரசாகசங்கள் வீரச்செயற்பாடுகள் எங்களுடைய நிலத்தினை பாதுகாப்பதற்கான முயற்சியாகும்.
தமிழ் மக்களின் நில அபகரிப்பானது வடகிழக்கில் குறிப்பாக கிழக்கு மாகாணம் மற்றும் முல்லைத்தீவு ,வவுனியா மாவட்டங்களில் மிக மோசமான முறையில் நடைபெற்று வருகின்றது.இதனை தடுத்து நிறுத்துவதற்கு பல முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றோம்.அதன் ஒரு அங்கமாக அண்மையில் ஜனாதிபதிச் செயலகத்திற்கு முன்னாள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினை பிரதி நிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதி நிதிகள் ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தோம். அதில் நாங்கள் கூறிய விடயம் தமிழ் மக்களின் நிலங்களை அபகரிப்பினை நிறுத்த வேண்டும்.வெவ்வேறு சட்டப்போர்வையில் நில அபகரிப்பினை மேற்கொள்ள வேண்டாம் என்ற கோரிக்கையினை முன்வைத்திருந்தோம்.
நாட்டின் தலைவர் கூறிய பதில் உங்களது 70 வருட கால முயற்சியினை 70 நாட்களில் மாற்றுவேன் என்ற கருத்தினை அடிப்படையாகக் கொண்டு மிகப் பொருத்தமான ஆளுநரையும் கிழக்கு மாகாண நில அபகரிப்புக்கு நியமித்திருக்கின்றார்.ஜனாதிபதி அவர்கள்
மேச்சல்தரை, வனப்பாதுகாப்பு,கரையோரப்பாதுகா ப்பு,மகாவலி எனும் போர்வையில் நில அபகரிப்பானது தொடர்ந்து கொண்டே செல்கின்றது.மறுமுனையில் தொல்லியல் திணைக்களத்தின் அட்டகாசமானது சொல்லில் அடங்காது எமது கலை கலாசார விழுமிய அடையாளங்கள் மாற்றியமைக்கப்பட்டு பெளத்த சின்னங்கள் மாத்திரமே நாட்டில் தொல்லியல் திணைக்களத்தினால் பாதுகாக்கும் நிலைமை உருவெடுத்துள்ளது.நீங்கள் அன்று செய்த வீரச்செயற்பாடுகளை இன்று வடக்கிலும் கொண்டு செல்ல வேண்டிய தேவைப்பாடு இருக்கின்றது.
அரசாங்கமானது வடகிழக்கில் தமிழ் மக்களின் இன அடையாளங்களையும் ,மொழி அடையாளங்களையும் அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றது இதனைத் தடுத்து நிறுத்துவதற்கு பல போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.தமிழ் மக்களின் இருப்பிற்காக தேர்தல் காலங்களில் பொய்யான வாக்குறுதி வழங்கியவர்களில் பலர் இன்று காணாமல் போயிருக்கின்றார்கள்.இவர்களை மக்கள் அடையாளம் கண்டுள்ளனர்.
இந் நாட்டில் தமிழ் மக்கள் சரித்திர பூர்வமாக வாழ்ந்தவர்கள் எங்களுக்கு சுய நிர்ணய உரிமை உண்டு.வடகிழக்கில் பல பிரதேசங்களை இழந்தாலும் இருக்கின்ற நிலங்களை பாதுகாத்து பெரும்பான்மை இனமாக வாழ்ந்து வருகின்றோம்.எமது உரிமைகள் கிடைக்கும் வரை தமிழ்த்தேசியத்துக்காக குறல் கொடுத்துக்கொண்டு இருப்போம் என்றார்.
Post A Comment:
0 comments so far,add yours