எருவில் கல்வி சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் மனிதநேய பணி (06.03.2022). எருவில் கிராமத்தை சேர்ந்தவரும் தற்போது அவுஸ்ரேலியாவில் வசித்து வருபவருமான திரு க .நோன்மதிநாதன் (நாதன் ) அவர்கள் தனது தந்தையாரான அமரர் கணேசன் (முன்னாள் இலங்கை போக்குவரத்து சபை பரிசோதகர் ) அவர்களின் நினைவாக வழங்கிய 45000 நிதி பங்களிப்பினை கொண்டு எருவில் கோடைமேடு கிராமத்தில் வசிக்கும் வறுமைக்கோட்டின் கீழ் வாழுஒருவருக்கு தமது மீன் விற்பனை தொழிலை செய்வதற்க்கு வசதியாக துவிச்சக்கர வண்டியும் மீன் பெட்டியும் மீன் கொள்வனவுக்கான பணமும் வழங்கி வைக்கப்பட்டது .
ஆன்மீக அதீதி அவர்களின் பங்குபற்றலுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் எஸ்டா அமைப்பின் ஸ்தாபக தலைவரும் எருவில் தெற்கு கிராம அபிவிருத்தி சங்க தலைவருமான சமூக சேவகர் அ .வசீகரன் எஸ்டா அமைப்பின் ஆலோசகரும் கோடைமேடு கிராம அபிவிருத்தி சங்க தலைவருமான க .விஜயசுந்தரம் எஸ்டா அமைப்பின் ஆலோசகர் ச .ரகுராமமூர்த்தி செயலாளர் ஜீவராஜ் மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர் க .பகீரதன் ஆகியோர் கலந்து கொண்டனர் .இக் குடும்பத்துக்கான வாழ்வாதார உதவியினை எஸ்டா அமைப்பின் ஊடாக வழங்கிய நோன்மதிநாதன் அவர்களுக்கு அமைப்பு சார்பாக நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்
Post A Comment:
0 comments so far,add yours