நூருல் ஹுதா உமர்

கல்முனை டாக்டர் ஜெமீல் ஞாபகார்த்த  வைத்தியசாலையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இலவச மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை சாய்ந்தமருது மல்ஹறு ஸம்ஸ் மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை) யில் இடம்பெற்றது

கல்முனை டாக்டர் ஜெமீல் ஞாபகார்த்த வைத்தியசாலையின் தவிசாளர் விசேட வைத்திய நிபுணர் டாக்டர் றிசான் ஜெமீல் அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக "வளமான தேசத்திற்கு ஆரோக்கியமான சமுகம்" எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்ட இந்த இலவச மருத்துவ முகாமின் போது சாய்ந்தமருது மல்ஹறு ஸம்ஸ் மகா வித்தியாலயத்தில் கடமையாற்றும் அதிபர்,  ஆசிரியர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்கள் அனைவருக்கும் உடற் பரிசோதனை,  இரத்தப் பரிசோதனை,  கண் பரிசோதனை போன்ற மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

கல்முனை டாக்டர் ஜெமீல் ஞாபகார்த்த வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் எம் ஜே இஸட் எம் ஜமால்டீன்,    திட்டப் பணிப்பாளர் டாக்டர் எம் ஏ எம் முனீர், பெஸ்ட் ஒப் யங் அரச சார்பற்ற நிறுவனத்தின் ,  செயலாளர் ஏ புஹாது, டாக்டர் ஜெமீல் ஞாபகார்த்த வைத்தியசாலையின் முகாமைத்துவ பணிப்பாளர் எம் எஸ் எம் நஜீம்டீன், உதவி முகாமைத்துவ பணிப்பாளர் எம் இஸட் எஸ் றியாஸ், நலன்புரி முகாமையாளர் எஸ் எம் அஜ்வத் ஆகியோர் கலந்து கொண்டனர்


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours