(காரைதீவு நிருபர் சகா)
சமுகத்தில் அவ்வப்போது எழும் குற்றச்செயல்களை தடுக்க பொலிசார் பொதுமக்கள் நல்லுறுவு அவசியம். அதற்கு இவ்வாறான உபதேசக்குழுக்கள் மேலும் வலுச்சேர்க்கும் என்பது எனது நம்பிக்கை.
காரைதீவுப்பொலீஸ் பிரதேசத்திற்கான மக்கள் பாதுகாப்பு உபதேசக்குழுவின் முதலாவது அங்குரார்பணக்கூட்டம் நேற்று காரைதீவு பொலிஸ்நிலையப் பொறுப்பதிகாரி ஆர்.எஸ்.ஜகத் தலைமையில் காரைதீவு பொலிஸ் நிலையத்தில் நடைபெற்றது.
அங்கு அவர் மேலும் கூறுகையில்:
மக்கள் சுதந்திரமாக நிம்மதியாக பாதுகாப்பாக வாழவேண்டும் என்பதற்காக பொலிசார் சேவையாற்றிவருகின்றனர். இருப்பினும் பொதுமக்களின் ஒத்துழைப்பில்லாமல் அது 100வீதம் சாத்தியமாகாது. எனவே பொதுமக்கள் பொலிசார் உறவு முக்கியானது.
தலைக்கவசம் என்பது மனிதஉயிரைப்பாதுகாக்கும். மற்றது அது இலங்கைச்சட்டம்.இருப்பினும் ஊருக்குள் சந்தர்ப்பசூழ்நிலைக்கேற்ப தலைக்கவசமில்லாமல் பயணிப்போரை அதன் பாதகநிலையை அறிவுறுத்தி வருகிறோம்.குற்றத்தைஎழுதி நீதிமன்றிற்கு அனுப்பி தண்டனை வழங்கி அரசாங்கத்திற்கு நிதி சேர்க்கவேண்டுமென்பதற்காக தலைக்கவசமில்லாதோரை பிடிப்பதில்லை. தங்கள் உயிர்ப்பாதுகாப்பில் பொலிசாருக்கும் பங்குண்டு என்ற கடமைஉணர்வில் அதனைச்செய்கிறோம். பொதுமக்கள் ஒத்துழைக்கவேண்டும்.
காரைதீவுப்பிரதேசத்தில் இரு கிராமசேவையாளர்பிரிவுக்கு ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் வீதம் நியமித்துள்ளோம்.அப்பிரிவிற்கு
Post A Comment:
0 comments so far,add yours