(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு

மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவுச் சபையின் கணனி நிலைய திறப்பு விழா நேற்று (22) திகதி செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவுச் சபையின் தலைவர் என்.ருத்திரமூர்த்தி தலைமையில் நடைபெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண
கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரும் கூட்டுறவு பதிவாளருமான ஏ.எல்எம்.அஸ்மி கலந்துகொண்டிருந்ததுடன், கணனி நிலையத்தினையும் உத்தியோகபூர்வமாக திறந்துவைத்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவுச் சபைக்கு சொந்தமான
தேவநாயகம் மண்டபத்தின் மேல்தளத்தில் அமையப்பெற்றுள்ள குறித்த கணனி பயிற்சி நிலைய திறப்பு விழாவிற்கு சிறப்பு அதிதியாக We Effect நிறுவனத்தின் ஆசிய பிராந்தியத்திற்கான பணிப்பாளர் நீனா லாறியா கலந்து கொண்டதுடன், கௌரவ அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவு உதவி ஆணையாளர் கே.வீ.தங்கவேல், மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவு பொது முகாமையாளகள் மற்றும் We Effect நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதிகள், கூட்டுறவுச் சபையின் உயரதிகாரிகள் உள்ளிட்ட மேலும் இதன்போது கலந்து சிறப்பித்துள்ளனர்.

இந்நிகழ்வின்போது ஆரம்பித்துவைக்கப்பட்டுள் கணனி பயிற்ச்சி நிலையத்தில் கல்வி பயிலவுள்ள மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் உள்ளிட்ட பெருமளவானோர் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.

குறித்த கணனிப் பயிற்சி நிலையத்தினை நிறுவுவதற்கு We Effect நிறுவனத்தினர் பாரிய நிதி பங்களிப்பினை வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours