(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு

கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் இசைத்துறையினர் வழங்கும் சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் ஆராதனை இன்று (07) திகதி திங்கட்கிழமை இடம்பெற்றது.

சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் இசைத்துறைத் தலைவர் கலாநிதி. நிர்மலேஸ்வரி பிரசாந்த் தலைமையில் சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின்
இராசதுரை அரங்கில் இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதியாக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி.புளோரன்ஸ் பாரதி கென்னடி கலந்துகொண்டிருந்த நிகழ்விற்கு ஆன்மீக அதிதியாக மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் தலைவர் சுவாமி பிரபு பிரேமானந்தா ஜீ மகராஜ் கலந்து சிறப்பித்திருந்தார்.

அதிதிகள் வரவேற்கப்பட்டதனைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகிய நிகழ்வில், வரவேற்புரை, மங்கள ஆராத்தி, ஆசியுரை, வாழ்த்துரை தலைமையுரை என்பன இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து பிரதம விருந்தினர் உரை நிகழ்த்தப்பட்டு, பஞ்சரத்தின ஆராதனை இடம்பெற்றதனைத் தொடர்ந்து இசை ஆராதனையுடன் நிகழ்வு இனிதே நிறைவடைந்துள்ளது.

இந்நிகழ்வுகளில் கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் விரிவுரையாளர்கள், கலைஞர்கள் மற்றும் மாணவர்கள் என பெருமளவிலானோர் பங்குபற்றியிருந்தனர்.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours