( அப்துல் பாஸித்)

நிந்தவூர் பிரதேச சபையினுடைய பராமரிப்பின் கீழுள்ள அல்- ஹிக்மா பாலர் பாடசாலையின் 2022 ஆம் ஆண்டிற்கான கல்விசார் நடவடிக்கைகளை ஆரம்பித்து வைக்கும் வகையில் வித்தியாரம்ப விழா அண்மையில் நடைபெற்றது.

நிந்தவூர் பிரதேச சபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம். அஸ்ரப் (  தாஹிர்) பிரதம அதிதியாகவும் கல்முனை கல்வி வலய முன்பள்ளி கல்வி கள உத்தியோகத்தர் அஷ்ஷெய்க் ஐ.எல். முஹம்மது அனீஸ்,  நிந்தவூர் பிரதேச செயலகத்தின் ஆரம்ப குழந்தைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐ.எல். முஹம்மது ஹப்ரத்  ஆகியோர் விஷேட அதிதிகளாகவும் ,  நிந்தவூர் பிரதேச சபையின் செயலாளர்உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.

சுமார் 25 ற்கும் மேற்பட்ட புதிய மாணவர்களை மாலை அணிவித்து வரவேற்றதுடன் அவர்களுக்கான பாடசாலை உபகரணங்களும் நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் கலந்து கொண்ட பிரமுகர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த பாலர் பாடசாலைக்கான நவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடம் உள்ளுராட்சி மன்றங்களின் உள்ளூர் மேம்பாட்டு  (Local Development Support Project- LDSP) திட்டத்தினூடாக நிர்மாணிக்கப்பட்டு கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆனையாளர் என். மணிவண்ணன் அவர்களினால் அண்மையில் திறந்து வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours