( அஸ்ஹர் இப்றாஹிம் )


சர்வதேச மகளிர் தினத்தையொட்டி இலங்கை றக்பி சம்மேளனம் அகில  இலங்கை ரீதியில் பாடசாலைகளுக்கிடையில் 19 வயதிற்குட்பட்ட பெண்களுக்கு நடாத்திய டெக் றக்பி சுற்றுப் போட்டியில் கொள்ளுப்பிட்டி புனித மரியாள் பெண்கள் கல்லூரி சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு சீ.ஆர்.எப்..சி மைதானத்தில் இடம்பெற்ற இறுதிக் போட்டியில் பிலியந்தல மத்திய மகா வித்தியாலயத்தை தோல்வியடையச் செய்து இந்த வெற்றியை கொள்ளுபிட்டி புனித மரியாள் பெண்கள் கல்லூரி பெற்றுக் கொண்டது.

இச்சுற்றுப் போட்டியில் புனித ஜோசப் பெண்கள் கல்லூரி , கொழும்பு சர்வதேச பாடசாலை , பிரியந்தல மத்திய மகா வித்தியாயலம் , கொழும்பு விவேகானந்தா பெண்கள் கல்லூரி , ரத்னவாலி பெண்கள் கல்லூரி ,கொள்ளுப்பிட்டி புனித மரியாள் பெண்கள் கல்லூரி  ,கொழும்பு ஆனந்தா பெண்கள் கல்லூரி என்பன கலந்து கொண்டன.

ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற இலங்கை நட்சத்திர வீராங்கனை சுசந்திகா ஜயசிங்க தலைமையில் இடம்பெற்ற மேற்படி போட்டியின் பரிசளிப்பு நிகழவில் இலங்கை றக்பி சம்மேளனத்தின் தலைவர் றிஸ்மி இல்யாஸ் கலந்து கொண்டிருந்தார்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours