பாறுக் ஷிஹான்


ஊடகவியலாளர் ராசிக் நபாயிஸ் எழுதிய  ஆரோக்கியமான சமூகத்தை நோக்கி' நூல் வெளியீட்டு விழா  சனிக்கிழமை (19) இடம்பெற்றது.

மருதமுனை கலாசார மண்டபத்தில் மர்ஹூம் ஆசாத் காமில் அரங்கில் கல்முனை வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் கலாநிதி சத்தார் எம். பிர்தௌஸ் தலைமையில் நடைபெற்றது.

 இவ்வெளியீட்டு விழாவில் கல்முனை பிரதேச செயலாளர் ஜெ. லியாகத் அலி பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.தொடர்ந்து  கௌரவ அதிதி இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம் .பாசில், சிறப்பு அதிதி  அரசியல் விமர்சகர் சட்டத்தரணி இஸ்மாயில் பி .மஆரிப் உரையாற்றினர்.

மேலும் ஏனைய அதிதிகளாக ஓய்வுநிலை அதிபர் ஏ .ஆர். அப்துல் றாசிக், பிறை எப்.எம் வானொலியின் பிரதிப் பணிப்பாளர் பஷீர் அப்துல் கையூம், அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் தலைவர் பி. எம். எம். ஏ. காதர் ஆகியோர்களும் கலந்து சிறப்பித்தனர்.

நிகழ்வில் ராசிக் நபாயிஸ் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் அவரது ஊடக சேவையை பாராட்டி பலரும் பல்வேறு விளக்கவுரைகளை வழங்கினர்.அத்துடன் நூலாய்வுரையினை பேராசியரியர் எம்.எம் பாசிலும்  நூல் விமர்சனப்பார்வையினை இலக்கிய விமர்சகர் ஜெஸ்மி. எம். மூஸா ஆகியோர் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.











Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours