(காரைதீவு  சகா)

வரலாற்றுப்பிரசித்திபெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன்  ஆலய வருடாந்த பங்குனி உத்தரத்திருவிழாவின் இறுதிநாள் சமுத்திர தீர்த்தோற்சவம் நேற்று(18)வெள்ளிக்கிழமை  சிறப்பாக நடைபெற்றது.

கொரோனா காரணமாக 2வருடங்களின் பின்பு றடைபெற்ற தீர்த்தோற்சவத்தின்போது அம்பாள் விநாயகப்பெருமான் முருகப்பெருமான் சகிதம் கிராமத்தில் மத்திய வீதிவழியாக  வீதியுலா வந்தார். ஆண்களும் பெண்களும் வடம்பிடித்து தேர் இழுத்து வெளிவீதியுலா வருவது கண்கொள்ளாக்காட்சியாக அமைந்தது. வீதியுலா நேராக வங்கக்கடலை அடைந்து அங்கு சமயக்கிரியைகள் நடைபெற்றன.

ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக்குருக்கள் தலைமையில் தீர்த்தோற்சவம் சமுத்திரத்தில் நடைபெற்றது.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours