.


(றாசிக் நபாயிஸ்)
யானை மற்றும் ஏனைய  விலங்குகளின் தாக்கதிலிருந்து மனிதர்களையும், பயிர்களையும் எவ்வாறு பாதுகாத்தல், பாதிப்பு ஏற்பட்டால் இழப்பீடுகளை எவ்வாறு பெற்றுக் கொள்ளுதல் தொடர்பாக கல்முனை பிரதேச செயலக கிராம உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வு 
கிராம நிர்வாக உத்தியோகத்தர்
யூ.எல்.பதியுத்தீனின் தலைமையில் பிரதேச செயலக ஸ்மார்ட் மண்டபத்தில் (28) இடம் பெற்றது.

பிரதேச செயலக அனர்த்த நிவாரண சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர் அப்துல் றாசிக் அஹமட் நபாயிஸின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இந்நிகழ்வு
அம்பாரை மாவட்ட வனஜீவராசிகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது. 

இதில் அம்பாறை மாவட்ட வனஜீவராசிகள் திணைக்கள வளத்தாப்பிட்டி காரியாலைய நிலைய பொறுப்பதிகாரி ரி.ஜெகதீஸன் கலந்து கொண்டு கருத்துக்கள் தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவிக்கையில் காட்டு யானைகள் ஆனது எமது நாட்டின் சொத்து, அதன் மூலம் எமது நாட்டுக்கு அன்னியச் செலவணிகள் கிடைக்கின்றன. இருந்தாலும் இவைகளின் மூலம் வீடுகளுக்கு, சுற்று பதில்களுக்கு, கட்டிடங்களும் தேசம் ஏற்படுவதுடன் காயங்களும் ஏற்பட்டு மரணங்களும் நிகழ்கின்றன. அத்துடன் பயிர்ச் சேதங்களும் நிகழ்கின்றன.

காயங்கள் ஏற்படும் போது அதற்குறிய வைத்திய அறிக்கையை சமர்ப்பித்தது நிதியைப் பெற்றுக் கொள்வதுடன் மரணங்கள் நிகழும் போது உரிய ஆவணங்களை முழுமையாக சமர்ப்பித்து ஜந்து லட்சம் இழப்பீடுகளையும் பெற முடியும்.

ஆனால் தேசிய வன சரணாலயம், வன பரிபாலன காடு, தேசிய வனப்பூங்கா போன்ற பகுதிகளில் இடம் பெறும் மரணங்களுக்கு இழப்பீடுகள் வழங்கப்பட மாட்டது.

யானைத் தாக்கம் மற்றும் மரணங்கள் ஏற்படும் போது மற்றும் உமது கிராம சேவகர் பிரிவுகளில் யானைகள் இறந்து கிடந்தால் உடனடியாக  உரிய அலுவலகத்திற்கு
 அறிவிக்க வேண்டும் எனவும் வேண்டிக் கொண்டனர்.

அத்துடன் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு யானைகள் வருகின்ற நிலையில் அவைகளை விரட்ட சிக்னல் வெடில், எறி வெடில்களை எவ்வாறு பயன்படுத்துவது என செய்முறைப் பயிற்சியும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில்விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்மற்றும் சுற்றுச்சூழல் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டார்கள்


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours