(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு
வாகரைப்பிரதேச மக்களின் நலன்கருதி கிழக்கு மாகாண நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புத் திணைக்களத்தின் வாகரை நீதி நிர்வாக பிரிவுக்கான அலுவலகம் இன்று 2022.03.15ம் திகதி செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
திணைக்களத்தின் கிழக்கு மாகாண ஆணையாளர் திருமதி ரிஸ்வானி ரிபாஸ் தலைமையில் இடம்பெற்ற
இந்நிகழ்வில், பிரதம அதிதியாக மாகாண சுகாதார சுதேச வைத்திய, சமூக சேவைகள், நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் மற்றும் கிராமிய மின் மயமாக்கல் அமைச்சின் செயலாளர் திருமதி ஜே.ஜே.முரளிதரன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
Post A Comment:
0 comments so far,add yours